தமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது நாம் தமிழரின் போர் முழக்கம் !!! அரசியல் யுத்தம் !!!

36

தமிழின எதிரி காங்கிரசை தேர்தலில் வீழ்த்த இன்று (25.03.11) நெல்லையில் துவங்குகிறது போர் முழக்கம் !!! நாம் தமிழரின் அரசியல் யுத்தம் !!!

தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு ஈழத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி தமிழ் இனத்தை கொத்துகொத்தாய் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் நாம் தமிழர் கட்சி ஈடுபடும். இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கமிடுவார்.

இதன் தொடக்கமாக நாளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பளார் செந்தமிழன் சீமான் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தனது போர் முழக்கத்தை தொடங்குறார். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரசாரம் தொடரும் .