சுடுகாடும் இலவசம் – தமிழ் உறவுகளே சிந்திப்பீர்கள்

102
சுடுகாடும் இலவசம்
உலகின் எந்த ஒரு மூலையில் தமிழன் இருந்தாலும், அவன் தமிழனாக உணர்வுகொண்டால் நாம் தோழர்களே.!!-
திராவிட பேய்பிடித்திருக்கும் எம் மூத்த தலைமுறைகளே.! அதன் வழி தோன்றிய இன்றைய  வாரிசு  சு யநலமிகளே.!விண்ணே இடிந்து வீழ்ந்தாலும் வீதிக்கு வரமறுத்து, வீட்டுக்குள்ளே  அடைகாக்கும் முட்டையிடாப்பெட்டை  கோழிகளே.!    அரசியலை சாக்கடையாய் மாற்றி அதில் ஊறும் பன்றிகளுக்கு காவடி தூக்கும் சமத்துவபுரங்களே.!நான் பெரிது, நீ பெரிது என பாராமல் நாடு பெரிது, இனம் பெரிது, மண் பெரிது என மானம் காத்த மறவர்களின் விதையில் விளைந்த தமிழ் தேசிய உறவுகளே..!            நாம்  என்ன செய்யப்போகிறோம், என ஏங்கி தவிக்கும் எம் இன இளைஞர்கள் படையே.!சாதி துறந்து, சமயம்  மறந்து தமிழனாய் ஒன்றுபட இனஉணர்வோடு அழைக்கின்றோம்.நீயும் நானும் தமிழன் என்ற பொன்னான வரிகள் உண்மையானால்,இந்தியம், திராவிடம் என்ற மாயையை மண்ணோடு  மண்ணாக்கி  புதிய சமுதாயம் படைப்போம்.நாளைய சமுதாயம் இளைஞர்கள் கையில் என்று நாள் கடத்த வேண்டாம்.இன்றே..ஒன்று கூடுவோம்.! வென்று காட்டுவோம்.!

உன்னை படி, மண்ணை பிடி. கட்சிகள் மாறினாலும், கழகங்கள் தோன்றினாலும் காட்சிகள் மாறுவதில்லை.பிச்சைகாரன்….பிச்சைகாரனாகவே. .. . !ஏதிலிகள் எதிலிகலாகவே…..!எச்சமாய் மிச்ச தமிழனும் சிந்திக்க மறந்து இலைக்கும், இலவசத்திற்கும் அடிமையாகிவிட்டான்.இலை கண்ட இதய தெய்வத்தை மறந்துவிட்ட ஆட்சியாளர்களுக்கு, இன்றும் மறவாமல் வாக்கிடும் வாக்காளர்களே.. இதய தெய்வத்தோடு மனிதநேயமும் மறைந்துபோய்விடவில்லையென்றால், சிங்கள காடைகளினால் கொத்தி கு தறப்பட்ட  இசைபிரியா நமது சகோதரி என்பதை   மறந்துவிடாதீர்கள்.

கண்ட சிங்களநாய், நரிகள்  எல்லாம் வந்து செல்ல பிரிட்டன் ஒன்றும் இந்தியா அல்ல, என்று உலகுக்கு ஓங்கி உரைத்த தமிழர்கள்  நம் இரத்த  உறவுகள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். விதியே விதியே என்செய்  நினைத்திட்டாய் என் தமிழ்சாதியை என்று வழிமொழிந்த மாவீரன்  முத்துகுமா ரின் புரட்சியில் பூத்த,  பூக்களை அடக்கி ஆண்ட துரோகிகளின் தோலை உரித்து பறை அடித்து சொல்லுங்கள். ஆமாம்.முத்து குமாரை அடக்கம் செய்துவிட்டீர்கள். ஆனால், அவன் பற்ற வைத்த இனத் தீ அடங்க மறுக்கும், அத்து மீறும், திருப்பி, திரும்ப  அடிக்கும்  என்று. சாதிகளும் சங்கங்களும் மலிந்துவிட்டாலும், வெங்காயம் விலை இன்னும் மலியவில்லை.   நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்  திராவிட கட்சிகள். கொலையும்  கொள்ளையும் அதன் கொள்கைகள்.முதலில் துரோகியை   துரத்துவோம். பின்  எதிரியை வீழ்த்துவோம்.நாம் இழந்ததும், எறிந்ததும் போதும். ஈழ நிகழ்வுகளை மறைத்து  ஊடகம், அதை சார்ந்த திரைப்படத்துறையை முற்றிலும் தன் குடும்பத்தால்  வசப்படுத்தி கொண்டிருக்கும் சூரியன், டாஸ்மார்க் போதையாலும், இலவச மோகத்தாலும் மொத்த தமிழினத்தையும் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் சுனாமி,  சாதியின் பெயராலும், உளவியல் ரீதியாகவும் பிரித்து வைத்து தமிழனை ஒன்றுபடாமல் வேரறுக்கும் துரோகியை முதலில்  தூக்கிஎறிவோம். தம் சுய இச்சைகளுக்காக  தமிழின படுகொலையை கள்ளமௌனம் காத்து காவுகொடுத்த,  கருணாக்களையும், கூட்டி கொடுத்த கதர் சட்டையையும்  கூண்டோடு ஒழிக்க ஒன்றுபடுவோம்.

எம் தாய் தமிழ் உறவுகளே.!பேனா முனையில் புரட்சி வெடித்தது அயல்தேசத்தில். ஆனால் இங்கே அதற்கும் வழியில்லை,உண்மை பேசும்  ஊடகங்கள்  ஊமைகளாகிவிட்டன.  அண்ணா, பெரியார், அம்பேத்கர் புரட்சியில் முளைத்த தலித் கதிரவன் ஆ. ராசா என்றும், அவர் முன்னவர் செய்ததைத்தான் தொடர்ந்து  செய்தார் என்றால், முன்னவர் கழிவை தின்றால், நீயும் தொடருவாயா..? இது ஊழல் அல்ல, இழப்புதான்என்று,  நூதன கொள்ளையை படிப்படியாக  மாற்றிக்கொள்ளும் பகுத்தறிவாளர்களே.! முப்பெரும் தலைவர்களுக்கு  மட்டுமில்லாது   மொத்த தமிழினத்திற்கும் சிறப்பு சேர்த்தஉலக ஊழல் நாயகன் ஸ்பெக்ட்ரம்  ராசா என்ற தமிழனை  தலித் என்று பிரித்து தீண்டாமை தீ வைத்ததேன்..?சிந்திக்க மறந்தவன் அடிமையாகின்றான்,நெய்வேலி மின்சாரம் தேசியமயம்.-தமிழ்நாட்டில் இருப்பதால்,முல்லை பெரியாரும், பாலாரும், கபினியாரும் தேசியமயமல்ல –  அவை இந்தியாவில் இருப்பதால்.கார்கிலுக்கும், குஜராத்திற்கும் அள்ளி அள்ளி கொடுத்த தமிழினம்வந்தேறியையெல்லாம்  வாழவைக்கும் தமிழினம், நம் தொப்புள் கொடி உறவுகளை ஏதிலியாய் சிறைவைக்கும் இந்த அரசை கண்டிக்காதது ஏன்…?காந்திகளையும், நேரு மாமாக்களையும் அறிந்திருக்கும் நாம், கப்பலோட்டிய தமிழனையும், பூலித்தேவனையும் தெரியாமல் இருக்கும் மாயம் என்ன….?

சிந்திக்க மறந்தவன் அடிமையாகின்றான்,அண்மையில் மலேசியா சென்ற பசந்சிங் என்ற சீக்கியனின் தலைமுடியை அவன் உறங்கும்போது யாரோ வெட்டிவிட்டார்கள். மறுநாள், அங்குள்ள 150000 சீக்கிய இனத்தவரும் ஒன்று சேர்ந்து மலேசியா அரசாங்கத்தையே அதிர வைத்துவிட்டனர். வெட்டினால் திரும்ப முளைத்துவிடும்  மயிர். இங்கே போனதோ  540 பேர் உயிர்.  நம்  மீனவ சகோதரியின்  தாலிக்கு இன்றைய விலை ரூ.5,00000. பொங்கல் பரிசாக அரசு  வேலை.              எம் தமிழ்தாயே இனி, உன் தாலிக்கு விலை ஏறும், – தேர்தல் வரை மட்டுமே.

தமிழச்சியின் தாலியருக்கும் சிங்கள நாய்களை தடுக்காமல், நாய்கடிக்கு போடும் இலவச ஊசிதான் இந்த பரிசா..? எத்தனை மீனவன் இறந்தாலும் எதிர்க்க மறுக்கின்றான். இதில், எதிரி யார் என்றே தெரியாமல் இன்றும்  விழிக்கின்றான். ஈழ இனப்படுகொலையின் இறுதியில், போரை நிறுத்துங்கள் என்று ஒட்டு மொத்த உறவுகளும்  கதறியபோது, நயவஞ்சக நடுவண் அரசின் நாடகத்தோடு நீங்களும் சே ர்ந்து, போர் நிறுத்தப்பட்டது  என்று அறிக்கைவிட்டபின்பும். நம் உறவுகள் அடுத்தடுத்த நாட்களில்  கொத்து கொத்தாக செத்து மடிந் தனர்.என்னவென்று கேட்டபோது, “மழை நின்றுவிட்டுவிட்டது, பூவாணம் இன்னும் விடவில்லை” என்ற முரசொலியில் எழுதி, நம் கண்களை  பேனாவால் குத்தி குதறினீர், தன் மனைவிகளின்  பிள்ளைகளின்  பதவிக்காக டெல்லிக்கு ஊர்ந்து சென்றதும், சூரத்தில் இருக்கும் நமிதாவிற்கு போனில் அழைத்தும்  பேசியமுதலமைச்சர்  அவர்கள், கடிதம் எழுதுவதை விட் டுவிட்டு தந்தி அடிப்பதற்கு தயாராகிவிட் டார்.  இனப்படுகொலையை, சகோதரயுத்தம் என்று சொன்னதற்கான அர்த்தம் இப்போதுதான் புரிகிறது .

கருணாநிதிக்கும்  ராஜபக்சேவுக் கும் உள்ள கள்ள தொடர்பை  சிங்களன் தந்தி அடித்துவிட்டான்.            சிங்களன் ராஜபக்சே உமக்கு சகோதரனாகிவிட்டான்.!               ஈழ நரபலியில் செம்மொழிமாநாடு  நடத்திய கொலைங்கரின் சாதனைகளில் சில,             திட்டமிட்ட திராவிட ஆட்சியின் சாதனை தமிழக மீனவர்களின்  கொலை எண்ணிக்கை 540 ஆக உயர்வு.திட்டமிடாத திமுக ஆட்சியின் சாதனை ஒரு ரூபாய் அரிசி, அது தமிழனுக்கு போட்ட வாய்க்கரிசி.ஐந்தாண்டுகளில் உழவை இழந்து உயிரைவிட்ட   தமிழனின் எண்ணிக்கை 3,737 பேர்.பத்தாண்டுகளில் உழவை இழந்த இந்திய விவசாயிகளின்  எண்ணிக்கை 70,00,000 பேர்.யானை கட்டி போரடித்த ராசராசன் ஆண்ட சோழநாட்டுக்கு வந்த சாதனையா..? சோதனையா ….? இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு ஒன்று லஞ்சம்,மற்றொன்று பிச்சை. இதில் நாம்  எந்த வகை? சென்ற  ஆண்டின் டாஸ்மார்க் வருமானம் ரூ.16,445 கோடி.குடித்து, குடித்து புத்தி மழுங்கி, சுற்றம் மறந்து, சோம்பி, சுருங்கி சுடுகாடு செல்லும்முன்,தமிழக அரசு தன் மகத்தான சாதனைகளை சொல்லக்கேளீர்.உலக  தமிழர்கள் எல்லாம் ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சி பரிமாரிக் கொள்ளுங்கள்.தமிழன்தான் உலக மகாகுடிகாரன். இந்த பெருமையெல்லாம் “இலவசங்களின் தாத்தா” கலைஞரையே சாரும்.

தன்மான திரா விட தலைவரின் நலத்திட்டங்களில் கலைஞர் காப்பீடு, கலைஞர் வீடு  வழங்கும் திட்டம், திருமண நிதியுதவி திட்டம், இலவச தொலைக்கட்சி திட்டம், முதலாக எத்தனை, எத்தனையோ இலவசங்கள் மத்தியில் இதோ ஒரு புரட்சி, ஆறாவது முறையாக முதல்வராக்குங்கள். அப்போதுதான், குடித்து, குடித்து உடல்வற்றி, உணர்விழந்து, ஊதாரியாய் வாழ்க்கையை தொலைத்து, பெற்றோரை மறந்து, உற்றவளின் நிம்மதியை கெடுத்து, பிள்ளைகளை பிச்சைக்காரர்களாக்க   முயற்சித்து முடியாமலேயே சுடு காடு செல்லும் எம், உடன் பிறப்புகளுக்கு “இலவச கலைஞர் சுடுகாடு “, “இலவச கலைஞர் கல்லறை” திட்டத்தையும்   கொலைஞர் செய்ய வாய்ப்பு கிடைக்கும். செந்தமிழன் சொன்னதில் பிழை ஒன்றும் இல்லை.தமிழ்நாட்டை சாராயம் ஆட்சி செய்கின்றது….மது,நாட்டுக்கு வீட்டு கேடு, என்று நஞ்சை விற்பனை செய்கின்றது இந்த தமிழக அரசு.( இதை ஏன் பூச்சிகொல்லி மருந்து, மற்றும் உரக்கடையில் விற்கக்கூடாது…?)
எம் தமிழே… எம் உயிரே..ஏன் இந்த அவலநிலை..?
இனியும், வரும், தேர்தலில் திமுகவிற்கும்  காங்கிரஸ் கட்சிக்கும்  ஒரு ஓட்டு விழுந்தாலும், அது  துரோகிகளின் அடையாளம் என்றே கருதுவோம்.             என் உயிர் தோழனே..!           இனி, நீ உயிர் துறக்க வேண்டாம்,            உணர்வுகொள்,”நாம் தமிழர்” என்ற உணர்வு கொள்,என்று எழப்போகிறோம்,அன்று விழப்போகிறது,இனி- அழ போவதில்லை,அட- விடபோவதில்லை.வீணர்களை வேரோடு வேரறுக்க வேல்  கம்பு தேவையில்லை.வீதி எங்கும் சத்தம் போட்டு, யுத்தம் செய்வோம் தோழா..- நீ..வீறுகொண்டு, விலங்குடைத்து வினா எழுப்படா..!இந்த பொல்லாத பூ உலகை புரட்சி பூ வாக்கடா..!வில்லாக வளைந்து, நெளிந்து, நில்லாமல் நின்று,-பகைவர் கையால் கொல்லாமல் கொலை யுண்டது போதுமடா..!                    அணிவகுப்போம் …           நம் பகைமறப்போம்.           பகையறுப்போம்…
நாம் தமிழராய்…
இப்படிக்கு
சிங்கப்பூரிலிருந்து நாம் தமிழர்கள்
முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தேர்தல் பரப்புரை பயிற்சிக்கூட்டம்.
அடுத்த செய்திவருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.