[காணொளி இணைப்பு] சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

37

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு மற்றும் பிரச்சார பயணம் குறித்து 23-3-2011 அன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆன்றோர் அவயக்குழு மற்றும் உயர் மட்ட குழுவில் திட்டம் வகுக்கப்பட்டது. இதையடுத்து இம்முடிவை ஊடகத்துக்கு தெரிவிக்கும் விதமாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் தீரன்,தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தடா,சந்திரசேகர்,வழக்கறிஞர் சிவக்குமார், பொறியாளர் வெற்றிக்குமரன்,தடா ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்வது என்றும் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியை சந்திக்கும், அதற்கு நாம் தமிழர் கட்சி அயராது களமாடும் எனவும் தெரிவித்தார்.

இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 63 தொகுதிகளிலும் எதிர்த்து பிரச்சாரம் செய்வோம். நாளை எனது பிரச்சாரத்தை நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தொடங்குகிறேன். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரச்சாரம் செய்வேன்.   தமிழரால் உருவெடுத்து உள்ளோம். காங்கிரசை கறுவறுப்போம். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும்.