காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள செந்தமிழன் சீமான் உட்பட கட்சியினர் மீது கொலை மிரட்டல் வழக்கு.

23

சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டார்.

இக்கூட்டம் நடத்துவதற்கும் பதாகை வைப்பதற்கும் அனுமதி பெறவில்லை எனக்கூறி மேடையில் இருந்த பதாகையை அகற்ற சிவகங்கை டி.எஸ்.பி., இளங்கோ அவர்கள் அளித்த உத்தரவின் பேரில் பதாகை, கட்சி கொடிகளை காவல் துறையினர் முன்னிலையில் அலுவலர்கள் அகற்றினர்.இதனையடுத்து இதற்கு செந்தமிழன் சீமான், மாவட்ட அமைப்பாளர் தீனதயாளன், நிர்வாகிகள் அன்வர்ராஜா, சோமசுந்தரம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் அவர்கள் அனைவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்ததாக , 143 (கூட்டம் கூடியது); 188 (அனுமதியின்றி கொடி, பேனர் கட்டுதல்); 353 (அரசு பணியை தடுத்தல்); 506(1)(கொலை மிரட்டல்) பிரிவுகளின் கீழ், காவல் துறை ஆய்வாளர் சங்கர், வடிவேல்முருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் மேலும் ஒருமுறை தமிழக காவல்துறை மத்திய ,மாநில அரசுகளின் ஏவல் துறை என்பதை நிரூபித்துள்ளது.

முந்தைய செய்திபாபநாசம் தேர்தல் பரப்புரை 31-3-2011
அடுத்த செய்திநாம் தமிழர் – காங்கிரசார் நேரடி மோதல் – பரபரக்கிறது பாபநாசம்.