[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பேரணி

34

நாம் தமிழர் கட்சியின்   கடலூர் மாவட்டம் சார்பில் காங்கிரஸ் போட்டியிடும் விருதாசலம் சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் காங்கிரசுக்கு எதிரான பிரச்சார பேரணி 26.03.2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அணைத்து பகுதியில் இருந்தும் போராளிகள் கலந்துகொண்டனர். இதன் மூலம் அந்த தொகுதியில் நாம் தமிழரின் களப்பணி ஆரம்பமாகிறது.

பேரணியின் இடையில் தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இவ்வகையான விழிப்புணர்வு பேரணி விருதாசலம் தொகுதியில் காங்கிரசின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமையுமென தொகுதி மக்கள் கருதுகின்றனர்.