இலவசம்… இலவசம்…!
வேட்டிசேலை
இலவசம்!
தொலைகாட்சிபெட்டி
இலவசம்!
கிரைண்டர் மிக்சி
இலவம்!
கேஸ் அடுப்பு
இலவசம்!
பொங்கி திங்க
புழுங்கலரிசி
இலவசம்!
வித விதமாய்
இலவசம்!
பின்வாசல் கொல்லையில்
நாம் வளர்த்த கத்தரிக்காய்
முச்சந்தியில் விற்ற பிறகு
மிச்சம் வந்த எச்சமது
முன் வாசல் வழியாக
நமக்காக இலவவசம்!
பாட்டாளி வர்க்கத்திற்கு
பட்டை நாமம்
மறைமுகமாய்
இலவசம்….!
படம் : தினமணி
கவிதை : கீற்று