நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர்.
இன்று காலை நாம் தமிழரின் காங்கிரசு கட்சிக்கு எதிரான பரப்புரை புளியங்குடியில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுட்சி உரையாற்றினார். காங்கிரசு கட்சி தமிழினத்திற்கு செய்த கொடுமைகளையும் தலைவிரித்தாடும் காங்கிரசின் ஊழல்களை பற்றியும் காங்கிரசு தலைவர்களின் மக்கள் விரோத எண்ணத்தையும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் உணர்ந்துகொள்ளும் விதமாக கருத்துக்களை அடுக்கினார்.
கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் உணர்வுடன் தமிழர்கள் திரண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம், நெல்லை சிவக்குமார், தலைமை நிலைய பேச்சாளர்கள் ஜெயசீலன், திலீபன் உட்பட கட்சியினர் பலர் பங்குபெற்றனர்.
இக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பரப்புரை குழுவினர் கடையநல்லூர் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கிளம்பினர்.