ஆட்சியை காப்பாற்றுவதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கிய காங்கிரஸ் கூட்டணி அரசு – விக்கிலீக்ஸ் இணையதளம்

16

ஆட்சியை காப்பாற்றுவதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கிய காங்கிரஸ் கூட்டணி அரசு.


மத்தியில் கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது பாராளுமன்றத்தில் 2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு கோடிக் கணக்கில் லஞ்சம் அளிக்கப்பட்டதை `விக்கி லீக்` நிறுவனம் தற்போது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ரூ.60 கோடி பணத்தை கட்டுக் கட்டாக அடுக்கி வைத்திருப்பதை அமெரிக்க தூதரக அதிகாரிக்கு முன்னாள் மத்திய மந்திரி சதீஷ் சர்மாவின் உதவியாளர் காண்பித்துள்ளார்.

விக்கி லீக்

பலவீனமான எம்.பி.க்கள் மற்றும் தொகுதி மறுசீரமைப்பில் தொகுதியை இழக்கும் எம்.பி.க்கள் போன்றவர்களை கண்டறிந்து பணம் கொடுத்து இழுத்துள்ளனர். அதை, செய்தி சேனல்களும் அப்போதே வெளிச்சம் போட்டுக் காட்டின. பா.ஜனதா எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் பணத்தை கொண்டு வந்து காட்டினார்கள். ஆனால், வெறுமனே பாராளுமன்ற விசாரணைக்கு மட்டுமே உத்தரவிடப்பட்டது.

தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகையை கூறி, இந்த விவகாரத்தை மூடி மறைக்க நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி முயற்சிக்கிறார். அந்த சலுகையானது அமெரிக்க தூதரக அதிகாரிக்கு பொருந்தும். இந்திய எல்லைக்குள் குற்றம் புரிந்த இந்தியர்களுக்கு எப்படி பொருந்தும். நம்பிக்கை வாக்கெடுப்பில் அமெரிக்கா ஆர்வமாக இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு பிரிவும் சுறுசுறுப்பாக இயங்கி தொழிலதிபர் சந்த் சத்வாலாவை தொடர்பு கொண்டிருக்கிறது என்று விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.