[படங்கள் இணைப்பு] மாதவரம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.

42

19-2-2011 அன்று நாம் தமிழர் கட்சிய்டின் கொள்கை விளக்க பிரச்சார பொதுகூட்டம்  சென்னை மாதவரம் நகராட்சி எதிரில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் முதலாவதாக தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை முழக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சமீபத்தில் தமிழின விரோதிகளால் வெட்டி கொல்லப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துகுமார்   அவர்களின் திருவுருவப் படத்திற்கு செந்தமிழன் சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியின் நிராவகிகள் மலர்வணக்கம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ,தமிழ் முழக்கம் சாகுல் அமீது,தடா,ராசா,தங்கராசு,ஆவல் கணேசன்,அன்புத் தென்னரசன்,அமுதா நம்பி,ஐந்து கோவிலான்,கோட்டை குமார்,வழக்கறிஞர் பரசுராமன்,கோட்டை குமார்,சமுத்திரா தேவி உட்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செந்தமிழன் சீமான் அவர்கள் பேசும் பொழுது நாம் தமிழர் கட்சியில் சேருவதும் காங்கிரசை ஒழிப்பதும் தமிழனாக பிறந்த ஒவ்வொருத்தரின் கடமை என தெரிவித்தார். ஈழத்தில் நடைபெற்ற இறுதி கட்ட போரின்போது அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சேவிற்கு  உறுதுணையாக நின்ற காங்கிரஸ் கட்சியையும் அதற்கு துணை போன தி.மு.க வையும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்து  தமிழகத்தை விட்டு விரட்டியடிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் சிங்கள இனவெறி கடற்படையால் தாக்கப்பட்டும் கடத்தப்பட்டும் வரும் தமிழக மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காத தமிழக, இந்திய அரசுகளை கண்டித்து பேசினார்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாதவரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் திருமலை மற்றும் பெரம்பூர்,மற்றும் திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி22-2-2011 அன்று தேசியத் தலைவரின் அன்னைக்கு வட சென்னை ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வீரவணக்கம்.
அடுத்த செய்திபார்வதி அம்மாள் இரங்கல் கூட்டம் விருதுநகர் 21-2-2011