வீரத்தாய் பார்வதியம்மாளின் அஸ்தி இனந்தெரியாதோரால் நாசமாக்கப்பட்டுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளது.

19


வீரத்தாய் பார்வதியம்மா அவர்களின் அஸ்தி நேற்று இரவு இனந்தெரியாதோரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பார்வதி அம்மாவை எரியூட்டிய இடத்தில் நாய்களை சுட்டுப் போட்டதுடன் அவரது அஸ்தியும் தாறுமாறாக அள்ளி வீசப்பட்டிருந்தது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலி நிகழ்வுக்குப்பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

இன்று காலை மயானத்துக்குச் சென்று பார்த்தபோது அவரது அஸ்தி எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து அள்ளி தாறுமாறாக வீசப்பட்டிருந்தது.

அத்துடன் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் போடப்பட்டும் இருந்தது என்று ஈழ இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முந்தைய செய்திவீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு செந்துறை நாம் தமிழர் சார்பாக ஒட்டியுள்ள சுவரொட்டி
அடுத்த செய்தி[காணொளி இணைப்பு] பிரித்தானியாவில் நடைபெற்ற பார்வதி அம்மாவின் வீரவணக்க நிகழ்வுக்கு செந்தமிழன் சீமான் வழங்கிய உரை