வருகின்ற 13-2-2011 அன்று ஒரத்தநாட்டில் செந்தமிழன் சீமான் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம்.

35

வருகிற 13-2-2011 அன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் மாலை 6 மணி அளவில் சிங்கள பேரினவாத அரசின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டுவதை கண்டித்தும், மத்திய,மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையினால் விண்ணளவு தொடும் விலைவாசி உயர்வினைக் கண்டித்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதா முத்துகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். ஒரத்தநாடு த.பாலா வரவேற்புரை ஆற்றுகிறார். தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாப்பாநாடு காமராசு, பட்டுக்கோட்டை சக்திவேல் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் வீரக்குமரன், வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில் கட்சியின் தலைமை பேச்சாளர்கள் பேராவூரணி திலீபன், புதுக்கோட்டை ஜெயசீலன், மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் என்ற திலீபன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அ.நல்லதுரை, தமிழ்முழக்கம் சாகுல் அமீது, ஆகியோர் உரையாற்ற உள்ளனர். இறுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன எழுச்சி உரை ஆற்றுகின்றார். ஒரத்தநாடு லெனின் மற்றும் ஒரத்தநாடு கார்த்தி உள்ளிட்ட அப்பகுதி செயல்வீரர்கள் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். —

முந்தைய செய்திஇலங்கைக்கு செல்லவிருந்த திருச்சி ரோட்டரி சங்கத்தினரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கைது.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]வருகின்ற 12-2-2011 அன்று கரூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்.