[படங்கள் இணைப்பு] திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.

37

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் 25.02.2011 வெள்ளிக் கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற்றது,  கூட்டத்திற்கு சகோதரி வெற்றிக்கொடி தலைமை ஏற்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  வழக்குரைஞர் கரிகாலன் முன்னிலை வகித்தார்.மதிவாணன் வரவேற்புரை நிகழ்த்த,  ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் மணிகண்டன்,  மாணவர் பேரவை பேச்சிமுத்து, வழக்குரைஞர் சிவகிரி கண்ணன், மாவட்ட பொருளாளர் இறையனார் ஆகியோர் உரை ஆற்றினர்.

பேராசிரியர் அறிவரசன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்த, சிறப்பு அழைப்பாளர் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலை மற்றும் வழக்குரைஞர் அங்கயர்க்கண்ணி ஆகியோர் நிறைவுரை ஆற்றினர், நிகழ்ச்சியின் துவக்கத்தில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி.பார்வதி வேலுப்பிள்ளை அவர்களின் படத்தை பேராசிரியர் அறிவரசன் அவர்கள் திறந்து வைத்தார், கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களும், தமிழ் உணர்வாளர்களும், நாம் தமிழர் கட்சி சொந்தங்களும் வீரத்தாய்க்கு வீர வணக்கம் செலுத்தினர்,கலந்து கொண்ட அனைவருக்கும் சீனிவாசன் நன்றி பாராட்டினார்.                             கூட்டத்தை மதிவாணன், சீனிவாசன், சமுத்திரவேல், கருப்பசாமி,மகேசு,தேவா ஆகியோர் சிறப்பாக  ஏற்பாடு செய்தனர்.