[படங்கள் இணைப்பு]வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் நடைபெற்ற அன்னை பார்வதி அம்மாள் அவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்வு.

74

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவைத் தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ராயபுரம்  பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் நிகழ்வு.

அன்னை பார்வதி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தியதை அடுத்து ஆர.கே நகர் பகுதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திருமதி கௌரி சங்கர் அவர்கள் மெழுகு தீபம் ஏற்ற அதை அனைவரும் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் ஆவல் கணேசன், சமுத்திராதேவி, ஆனந்தராசு,சதிஸ்,கோபால்,அருண்,கௌரிசங்கர்,ராசகுமார் மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட குழந்தைகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு அனுமதி வழங்காமல் மறுத்த காவல் துறையினர் பெண்கள் பெருமளவில் பங்கேற்பதை தெரிந்துகொண்டு தங்கள் முயற்சியிலிருந்து பின்வாங்கினர்.