தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தாயார்அன்னை பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி விருதுநகர்மாவட்டம், இராசபளையத்தில் (21 – 02 -2011) அன்று மாலை 5 .00மணியளவில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழின உணர்வாளர்கள்மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.இப்பேரணியில் 300 – க்கும் மேற்ப்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்பேரணி இராசபாளையம் பெரியார் சிலையிலிருந்து கிளம்பி நகர் வலம்வந்து அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் முடிவுற்றது.முடிவில் அன்னைக்கு மலரஞ்சலியும், வீரவணக்கமும் செலுத்தப்பட்டுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் அறிவரசன் அய்யாசிறப்புரை ஆற்றினார்கள்.