தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

19

ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25 – 01 – 2011 )செவ்வாய் கிழமை மாலை ஈரோடை அஞ்சல் அலுவலகம் முன்பு தொடர் மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்தாத மாநில, நடுவண் அரசுகளை கண்டிதது,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.செயராசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தென் மொழி அய்யா நிலா வேங்கடவன் , நாமக்கல் மருத்துவர் பாஸ்கர்,ஆல.கணேசன், ஈரோடை மாவட்ட அமைப்பாளர்கள்இரா.செழியன்,மா.கிசீதாலட்சுமி,மைதிலி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.அமைப்பாளர் கார்த்தி நன்றி உரையாற்றினார்.