ஆக்கிரமிப்பு என்றுகூறி கடற்கரையோர கடைகள் அகற்றம் – மீனவ மக்களின் வாழ்வாதாரப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு

424

பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிறு மீன் கடைகள், உணவகங்களை ஆக்கிரமிப்பு என்றுகூறி அகற்றும் திமுக அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக இரவு-பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவளித்து, துணை நிற்கும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 18-04-2023 கலங்கரை விளக்கம் பின்புறம் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள போராட்டக்களத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மீனவ மக்களைச் சந்தித்து, கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

மக்கள் சந்திப்பு:

செய்தியாளர் சந்திப்பு:

முந்தைய செய்திஜெயங்கொண்டம் தொகுதி கொடி கம்பம் நடும் விழா
அடுத்த செய்திபோளூர் தொகுதி செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு