பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அழுகி வருகிறது – மீண்டும் விலை உயர்வு

17
கடந்த சில நாட்களாக, வெங்காயத்தின் விலை விண்ணைத் தாண்டி அதிகரித்து வருகிறது. இதனால் விலையைக் கேட்கும் போதே, அனைவரின் கண்களும் கலங்குகிறது. இந்நிலைமையைச் சரிசெய்ய, பாகிஸ்தானில் இருந்து 200 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

தொடர் விலை உயர்வு காரணமாக, கடந்த 5 நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து மும்பை வந்து இறங்கிய 200 டன் வெங்காயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கியுள்ளது.பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட வெங்காயத்தை மொத்த விற்பனை சந்தைக்கு கொண்டுவர, மகாராஷ்டிர மாநில அரசின் தடைநீக்க சான்றிதழ் வேண்டும். தேவையான தகவல்களை சுங்க வரி அலுவலத்திற்கு வழங்குவதில் மாநில அரசு தாமதம் செய்து வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை, சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தான், தடைநீக்க சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், ஈரப்பதமாக உள்ள காரணத்தால் அவை அழுகத் தொடங்கியுள்ளது. வெங்காயப் பற்றாக்குறை, விலை உயர்வு காரணமாகத் தான் பாகிஸ்தானிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது, அவைகளும் அழுகி வருவதால் பெரு நகரங்களில் மீண்டும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

டெல்லியில் வெங்காயத்தின் சில்லறை விலை ஒரு கிலோவிற்கு ரூ.60ஆகவும், மற்ற நகரங்களில் ரூ.65 ஆகவும் விற்கப்படுகிறது. சென்னையில் மட்டும் ஒரு கிலோ ரூ.80 என்றவாறே விற்பனை செய்யப்படுகிறது.

முந்தைய செய்தி9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.
அடுத்த செய்திவீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1 ஆம் ஆண்டு வீரவணக்கம்