உடுமலைப்பேட்டையில் சைனிக் பள்ளி நாள்காட்டியை எரிக்கும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜபக்சே உருவம் பொறித்த நாள்காட்டிகளை எரித்து போராட்டம் நடைபெற்றது. உடுமலை ராணுவப்பள்ளி வெளியிட்டநாள் காட்டியில் ராஜபக்சே உருவப்படம் இருந்தது. இது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாம் தமிழர் உட்பட பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
இந்த நாள்காட்டிகளை திரும்ப பெற வலியுறுத்தி நாள்காட்டிகளை எரிப்பு போராட்டத்தை பெரியார் திராவிட கழகத்தினர் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சினர் 7 பேர் பட்ட 200 பேர் கைது இதில் பல்வேறு பட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன
ஆர்.டி.மாரியப்பன்
(மாவட்டச் செயலாளர், ம.தி.மு.க)
காந்தி செல்வன்
(நகரச் செயலாளர். பா.ம.க)
முருகன்
(ஒன்றியச் செயலாளர், வி.சி.க)
பாபு இராசேந்திர பிரசாத்
(ஒருங்கிணைப்பாளர், நாம்தமிழர்)
பெரியார்தாசன்
(மாவட்டத் தலைவர்,ஆதித்தமிழர் பேரவை)
ப.முருகானந்தம்
(மாவட்டச் செயலாளர்,புரட்சிப்புலிகள்)
சு.துரைசாமி
(மாவட்டத் தலைவர்,பெரியார் திராவிடர் கழகம்)
மனோகரன்
(மாவட்டச் செயலாளர்
தமிழர் தேசிய இயக்கம்)