26-1-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தஞ்சை பாபநாசத்திற்கு வருகை தந்தார்.இதனையடுத்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ் முழக்கம் சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தடா ராசா, வழக்கறிஞர் நல்லதுரை,வழக்கறிஞர் மணி செந்தில், தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழ.சக்திவேல் ,காமராசு தஞ்சை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரக்குமரன்,சதா முத்துகிருஷ்ணன் , தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் வினோபா, வீரமுத்துகுமரன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்றல் சந்திரசேகர் மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதலில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் செந்தமிழன் சீமான் அவர்களால் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாபநாசஒன்றிய, நகர ஒருங்கிணைப்பாளர்கள் மு.க.மணிகண்டன்,பழ,ரஜினி,சுபாஷ் சந்திரன்,சே.சுரேஷ் மற்றும் நா.கலையரசன் ஆகியோர் செய்திருந்தனர்.