மாவட்டம் மற்றும் மாநகர் சார்பாக நடந்த இந்நிகழ்வின் போது மாநகர பொறுப்பாளர் இசக்கித்துரை, மாவட்ட பொறுப்பாளர் செயசீலன், பாலா, ரீகன், கனி, தினேசு, கில்டன், சரவணன், செரால்டு, சமையல் குமார், வடிவேலு, ராஜசேகர், முருகன், தமிழன் செம்புலிங்கம், மு. இராசா, ரஸ்கின், மாரிமுத்து உள்பட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மாவீரன் கரும்புலி முத்துக்குமார் 2ம் ஆண்டு நினைவு நாளை தமிழ் போராளி தினமாக அறிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள காமராசர் கல்லூரி எதிர்புற சாலையில் வீரவணக்க நாள் முழக்கங்கள் முழங்க கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் இளைஞரணி செயலாளர் ப.ம.இளையவன், வழக்கறிஞர் தமிழடியான், வழக்கறிஞர் பொன்ராசு, வழக்கறிஞர் செயபாலன், ஏங்கல் சு, மு.இராசா, இளவரசபாண்டியன், இரமேசு, முத்துக்குமார், சதீசு, இராசா சந்திரன் மாரி, துரை, மாரியப்பன், மாரிமுத்து உள்பட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.