நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஜெயக்குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இலங்கை கடற்படையால் உயிரிழந்த ஜெயக்குமார் உடலுடன் புஷ்பவனம் பகுதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை கடற்படையை கண்டித்து புஷ்பவனம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய மாநில அரசுகளை அவர்கள் வலியுறுத்தினர்.