இலங்கை மேஜர் ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்கள்

30
லங்கா நியூஸ் வெப் இணையதளம் உலகத்தமிழர் பேரவையில் உறுப்பினராக இருக்கும் பிரிட்டனில் செயல்படாத தமிழ்தேசிய அமைப்பு ஒன்றின் மூலம் சேகரிக்கப்பட்ட மேஜர்  ஜெனரல்.கல்லேகேக்கு எதிரான போர்குற்ற ஆவணங்களை லண்டனில் உள்ள நீதித்துறை நடுவர் ஒருவரிடம் கையளித்துள்ளது.இந்த ஆவணத்தை திரட்டியிருக்கும் அமைப்பு செயல்படும் நாட்டைப்பற்றி எந்த தகவல்களையும் இணையத்தில் சொல்லியிருக்கவில்லை.மேலதிகமாக விசாரிக்கும்போது அவ்வமைப்பு செயல்படும் நாடானது இலங்கையுடன் பெரும் நட்பில் உள்ளதும்,போரில் பெரும் உதவி புரிந்த ஒரு நாடு எனத் தெரியவருகிறது.அந்த காணொளியின் ஒரு பகுதியினை மேஜர்.ஜெனரல்.கல்லேகேவுக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றத்தில் வாதிடவிருக்கும் சட்டத்தரணி பார்வையிட்டுள்ளார்.அது 59வது படையணி அல்லது சிறப்புப் படையணி 1 இன்   உறுப்பினர் ஒருவரால் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.இந்தக் காணொளி பார்வைக்கு வைக்கப்பட்டால் மேஜர் ஜெனரல் கல்லேகேக்கு பிடியாணை வழங்கப்படுவது தவிர்க்கமுடியாது என்று உலகத் தமிழர் பேரவை உறுதியாக நம்புகிறது.

பிரிட்டன் வெளியுறவுத்துறை அலுவலகமொன்றில் பிரி.பிரசன்னா டி சில்வ(கட்டளை அலுவலர்-55 வது படையணி)  வுக்கு எதிரான ஆவணங்களை உலகத்தமிழர் பேரவை அளித்திருப்பதாகவும் அவை மிகமுக்கிய ஆவணங்களாக வெளியுறவு மற்றும் காமன்வெல்த் விவகார அலுவலர் ஒருவர் ஏற்றுக்கொண்டிருப்பதகவும் மேலதிக தகவல்கள் கிடைக்கின்றன.மிகக் கொடூரமான ஆவணங்கள் என்று உலகத்தமிழர் பேரவையினர் சொல்லும் இவ்வாவணங்கள் பிரிட்டன் பாராளுமன்ற மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

நேற்று சானல்-4  செய்திகளில் மேஜர் ஜெனரல் குணரத்ன (53 வது படையணி)க்கு எதிரான ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.லங்கா நியூஸ் வெப் இணையமும் மேஜர் ஜெனரல் குணரத்னவுக்கு எதிரான  சில ஒளிப்படங்களைப் பெற்றுள்ளது.ஆராய்ந்து பார்த்ததில் அவை மே-18 ,2009 அன்று எடுக்கப்பட்டவை எனத் தெரிகிறது.

மேலும் சானல்-4 ஆனது பின்புறம் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் இசைப்பிரியா 53 வது படையணியினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது .மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன வெற்றிபெற்றதகக் கொண்டாடிய மே 18 ,2009  அன்று எடுக்கப்பட்ட பதின்மூன்று ஒளிப்படங்கள் வெளியிடப்படாமல் உலகத்தமிழர் பேரமைப்பிடம் இருக்கிறது. புலிகளின் லேப்.கேணல் ரமேஷ் ராணுவத்தால் சரணடையச் செய்யப்பட்டபோதும் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கிணங்க அவரை ராணுவம் கொலை செய்ததும் கேள்விக்குரியதாகி உள்ளது.

அனைத்து ஆவணங்களும் ஐ.நா குறித்த காலக்கெடுவான டிசம்பர்-15  ஆம் தியதிக்குள் ஐ.நா விசாரணைக்குழுவிடம் சேர்க்கப்படும் எனத்தெரிகிறது.இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ஹெகலியே டெய்லிகிராப் செய்தியாளர் டீனுடனான பேச்சுக்களின் ஒலிப்பதிவில் லேப்.கேணல் ரமேஷ் போரில் போர்க்களத்தில் தான் கொல்லப்பட்டதாக  தெரிவிக்கிறார்.டீன் அதை மறுத்து ஆவணங்களை சுட்டிக்காட்டியபோது அதிர்சியடைந்தவராக தடுமாறிய ஹெகலியே தனக்கு நிரம்ப வேலையிருப்பதாகவும் மேற்கொண்டு பதிலளிக்க தமக்கு அவகாசம் வேண்டுமெனவும் இறைஞ்சுகிறார்.

டிசம்பர்-2  2010 அன்று ஹெட்லைன் நியுஸ் -இந்தியாவுடனான பேட்டியிலும் தகவல் குறைபாட்டால் அவர் தவிக்கிறார்.அரசின் சார்பில் பணிபுரியும் செய்திதொடர்பாளர்களுக்கே அரசு பிழையான தகவல்கள் தருவது உறுதியாகிறது.

அடுத்த சில தினங்களில் லங்கா நியூஸ் வெப் ஆனது மேஜர் ஜெனரல் கல்லேகே ,குணரத்ன இருவருக்கும் எதிரான சில ஒளிப்படங்களை வெளியிடும் எனத் தெரிகிறது.பிரிக்.பிரசன்னா டி சில்வ வுக்கு எதிரான சில ஆவணங்களும் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழாக்கம் : மீனகம்

மகேந்திரன் எட்டப்பராசன்

நன்றி : லங்கா நியூஸ் வெப்

முந்தைய செய்தி[ஒலிப்பதிவு இணைப்பு] சிறையை விட்டு சீறி பாய்ந்த சீமான் – பாலமுரளிவர்மன்
அடுத்த செய்திஇலங்கை அமைச்சரின் பெங்களூரு வருகையை எதிர்த்த நாம் தமிழர் கட்சியினர் கைது