மத்திய மாநில அரசுகள் கைவிட்ட நிலையில் சிங்கள இனவெறி கடற்படையால் நேற்றும் தாக்கப்பட்ட இந்திய(?) தமிழக மீனவன்.

50

தமிழக மீனவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் உதவியும் இந்திய கடலோரக் காவல் படையிடமிருந்தோ அல்லது கடற்படையிடமிருந்தோ இதுவரை  கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றனர் இதன் உச்சக்கட்டமாக இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களைத் தாக்கும் அவலமும் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கடலுக்கு புறப்பட்டு சென்ற தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லை பகுதியான கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாங்கள் கொண்டு வந்த இரும்பு கம்பியால் தாக்கியும், கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளையும் அறுத்ததோடு மீனவர்கள் வைத்திருந்த டீசலையும் கடலில் தூக்கி வீசினர். சிங்கள கடற்படை தாக்கியதில் மீனவர்கள் 20 தமிழக மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் இந்திய கடலோர எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர், விலை மதிப்புமிக்க மீன்களையும் பறித்து சென்றனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், படகுகளில் ஏறி மீன்களை அள்ளிச் சென்றனர். மேலும் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என விரட்டி அடித்தனர்.

இதேபோல் கடந்த வாரம் காரைக்கால் பகுதி மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், வழிகாட்டும் கருவிகளையும், மீன்களையும் பறித்து சென்றனர்.

இப்படி அடுத்தடுத்து நடந்து வரும் தொடர் தாக்குதல்களால் தமிழக மீனவர்கள் தங்கள் வால்வாதாரங்கை இழந்து, பிழைப்புக்கு கடலுக்குள் சென்றால் தாங்கள் அடி பட்டு உள்ளதை இழந்து வரும் நிலை தொடர்வதால், மாநில அரசும் மதியம் தங்களை கைவிட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் நிலை குலைந்து போயுள்ளனர்

முந்தைய செய்திஇராமநாதபுரம் பொதுகூட்டம் 27-12-2010
அடுத்த செய்திதமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு 1060 விவசாயிகள் தற்கொலை – தேசியக் குற்றப்பதிவேடுகள் கழகத்தின் (NCRB)புள்ளிவிவரம்