போர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய கோரி மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கைது

27

பிரிட்டன் சென்றுள்ள சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே போற்குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை நாம் தமிழர் கட்சியினர் சார்பாக சென்னை சாஸ்த்திரி பவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் மனு கொடுக்க சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சியினை சார்ந்த நூற்றுக்கும் அதிகமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அதியமான்,அமுதாநம்பி ,தங்கராசு,அன்புதென்னரசு,சிபி சந்தர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராஜபக்சேவிற்கு எதிராகவும் பிரிட்டன் அரசு ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

முந்தைய செய்திராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கட்சியினர் நூற்றுகணக்கானோர் பங்கேற்ப்பு
அடுத்த செய்திஇராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் தினம்