தமிழீழம் தனிநாடு என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – மே 17 இயக்கம்

27

மே பதினேழு இயக்கத்தினரால் “தமிழகமும் தமிழீழ விடுதலையும் – தற்போதைய சூழலில் நமது செயல்பாடுகள்” என்ற தலைப்பில் மதுரையில் கடந்த 19.12.2010 அன்று கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் “தமிழீழம் தனிநாடு என  தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்ற தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் திருமுருகன் தனது உரையில் “மர்லன் பிராண்டோ தனக்கு ஆஸ்கார் விருதை வழங்கிய பொழுது அதை தான் வாங்காமல் அபாச்சேக்கள் (செவ்விந்தியர்) பெண்மணியை தனக்குப்பதில் சென்று வாங்கச்சொல்லி செவ்விந்தியர்களுக்கு நடைபெற்ற கொடூரத்தை ஆஸ்கர் மேடையில் கூறச்சொல்லியிருந்தார்” இந்தச்செய்தியினை தெரிவித்திருந்தார்.

அச்செவ்விந்தியப்பெண்மணி உரையினையும் இங்கே இணைத்துள்ளோம்

மதுரை கருத்தரங்கத்தில் நிறைவேற்றப்பட்ட  நான்கு தீர்மானங்கள்

1 . இந்திய பெருங்கடலை தமிழர் பெருங்கடல் என்று பெயர் மாற்றம் செய்து அழைக்க  வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

2 ) தமிழீழம் தனிநாடு என  தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

3 )இலங்கை அரசை இனபடுகொலை அரசு என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

4 ) ஊடகவியலாளர் இசைபிரியா மற்றும் போராளிகள் மீதான படுகொலைக்கான விசாரணையை துரிதமாக நடத்தி குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.