ஏழு நாடுகளின் கடற்படைத் தளபதிகள் சிறிலங்கா வருகை.

116
சிறிலங்கா கடற்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஏழுநாடுகளின் கடற்படைத் தளபதிகள் சிறிலங்கா வரவுள்ளனர்.

சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல சேனாரத் இதுகுறித்து தகவல்வெளியிடுகையில் “சிறிலங்கா கடற்படையின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டுநடத்தப்படவுள்ள கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஏழு நாடுகளின் கடற்படைத் தளபதிகள்சிறிலங்கா வரவுள்ளனர்.

அவுஸ்ரேலியா, பங்களாதேஸ், இந்தியா, மாலைதீவு, மலேசியா, பாகிஸ்தான். ஐக்கிய அரசுஎமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படைத் தளபதிகளே எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளகருத்தரங்கில் பங்கேற்பதற்காக கொழும்பு வரவுள்ளனர்.
அத்துடன் 21 நாடுகளின் கடற்படை அதிகாரிகளும், ஆறு நாடுகளின் போர்க் கப்பல்களும்சிறிலங்காவுக்கு வரவுள்ளன“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.