இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீரர் தினம்

187

தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் அரண்மனை முன்பு மாவீரர் தினம கீழக்கரை நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாம் தமிழர் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மறைந்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது மற்றும் மாவீரர்களின் புகைபடங்கள்  பொது மக்கள் வீரவனக்கதிற்காக வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.நாகேசுவரன் சிறப்புரை ஆற்றினார் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் கண்.இளங்கோ ,பிரதாப், இராமேஸ்வரம் நகர செயலாளர் நம்பி ராஜன் ,ஜெகன்,உச்சிப்புளி நகர செயலாளர் பாக்யராஜ் மற்றும் சிண்டு பிரபாகரன் ,சேகு,வாலிநோக்கம் செய்யது, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டொமினிக் ரவி மற்றும் செரோன் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.