கருப்பு சூலை: இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

16

1983ஆம் ஆண்டு இலங்கை இனவாத அரசின் ஆதரவுடன் சிங்கள இனவெறியர்கள் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்து, உடைமைகளைக் கொள்ளையடித்து, தெருக்கள் தோறும் குருதியில் நனைய, வீடுகள் தோறும் பிணங்கள் வீழ, திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றழித்த கறுப்பு சூலை இனப்படுகொலை நாள் இன்று!

ஈழத்தாயகத்தில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி 40 ஆண்டுகளைக் கடந்த பின்னும் இன்றளவும் சிங்கள இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமல், அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய அவலநிலையில் தமிழ் மக்கள் வாடுவது வரலாற்றுப் பெருந்துயரமாகும்!

சிங்கள இனவெறிக்கு இலக்காகி கருப்பு சூலை இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திமாஞ்சோலை தேயிலைத் தோட்டப்போராளிகளுக்கு சீமான் வீரவணக்கம்!
அடுத்த செய்திSeeman’s Statement on the 42nd Anniversary of Black July!