பள்ளி வளாகம் சீரமைப்பு மரக்கன்று வழங்குதல் -திருப்போரூர்

(01.03.2020) சுற்றுசூழல் பாசறை திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பில்  சதுரங்கபட்டினம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தை சுற்றி நெகிழிகுப்பைகள் அகற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு பொது மக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கண்காணிப்பு கருவி பொருத்தும் பணி -தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி

தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் 3 வது தெருவில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுவதால் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது.

திருமுருகப்பெருவிழா -தாம்பரம் சட்டமன்றத் தொகுதி

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி 08.02.2020 அன்று நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக அண்ணா தெரு சந்திப்பு ,சிட்லபாக்கம் பேரூராட்சியில் திருமுருகப்பெருவிழா நடைபெற்றது.

மரக்கன்று வளர்ப்பு பண்னை -திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

(23.02.2020) திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுசூழல் பாசறையின் சார்பாக  மரக்கன்று வளர்ப்பு பண்னைஆரம்பிக்கப்பட்டது.

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழ் வணக்க பொதுக்கூட்டம் திருப்போரூர்

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு 18.02.2020 அன்று புகழ் வணக்க பொதுக் கூட்டம்  நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

16.02.2020 ஞாயிற்றுக்கிழமை  அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடித்தண்டலம், பாக்கம்,  விண்ணம்பூண்டி, மின்னல் சித்தாமூர், கொங்கரை ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் தொகுதி

திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 9.2.2020 அன்று நடைபெற்றது.

திருமுருகப் பெருவிழா-செய்யூர் தொகுதி,

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் 9.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருமுருகப் பெருவிழா கொண்டாடப்பட்டது

தைப்பூச திருவிழா-வேல் வழிபாடு-செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நாம்தமிழர்கட்சியின் வீரத்தமிழர்முன்னணி பாசறையின் சார்பில் 9.2.2020 அன்று தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு #காட்டாங்கொளத்தூர் காந்தாளியம்மன் கோவிலிருந்து #வேல் வழிபாடு செய்து #பால்குடம் எடுத்து #மறைமலைநகர் ரயில்நகர் மலையில் வீற்றிருக்கும் #கல்யாணமுருகனை வழிபட்டனர்

தீ விபத்து வீடுகள் சேதம்-நிவாரண பொருட்கள் வழங்குதல்

(02.02.2020) செங்கல்பட்டு மாவட்டம் திருப்பேரூர் சட்டமன்ற தொகுதி  காட்டாங்குளத்தூர் ஒன்றியம் காயரமேடு பகுதியில் தீ விபத்தில் தங்கள் உடைமைகளை இழந்த பழங்குடியின உறவுகளுக்கு நிவாரன பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பதட்டது.