அறிக்கைகள்

சுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்

தமிழ்நாட்டிலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (31.08.25) முதல் 45 ரூபாய் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்களின் விலையை...

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும்! –...

கட்டுப்பாடிழந்த அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்காமல் அலைக்கழிக்கும் திமுக அரசின் கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் தம்பி...

இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள்: அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சீமான்...

இராமநாதபுரத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் முன்மொழிந்த...

‘கல்வி வள்ளல்’ பாரிவேந்தர் அவர்களுக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா பாரிவேந்தர் அவர்களின் 86வது அகவை நாளில்,...

அரசின் அலட்சியப்போக்கால் தூய்மைப்பணியின்போது உயிரிழந்த தங்கை வரலட்சுமியின் மரணத்துக்கான துயர்துடைப்புத்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க...

சென்னை, கண்ணகி நகர் அருகே தூய்மைப்பணியாளர் தங்கை வரலட்சுமி அவர்கள் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த னத்துயருமடைந்தேன். தங்கையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்...

நாகை மாவட்டம், பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

நாகை மாவட்டம், பனங்குடியில் இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் (Chennai Petroleum Corporation Limited - CPCL) சிபிசிஎல் கடந்த 2019ஆம் ஆண்டு எண்ணெய்...

தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும்,...

தங்களது வாழ்வாதார உரிமைகோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை, ரிப்பன் மாளிகை வாசலில் 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, கொடும் தாக்குதல் தொடுத்து, திமுக அரசு...

207 அரசுப்பள்ளிகளை மூடுவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

தமிழ்நாட்டில் நிகழாண்டு 207 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. நான்காண்டு கால திராவிட மாடல் விளம்பர ஆட்சியில் அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, தரத்தை உயர்த்த தவறிய திமுக அரசின்...

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான்...

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு நிபந்தனைகளுடன் 420 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வீடு ஒதுக்கீடுப் பெற்ற ஈழச்சொந்தங்கள் தங்கள் வீட்டின் முன் இருந்த, ஆபத்தான திறந்தவெளி...

உத்தரகண்ட் நிலச்சரிவு பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை விரைந்து மீட்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்புக் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக, மக்களின் குடியிருப்பு பகுதிகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு பலர் உயிரிழந்துள்ள...