செஞ்சி தொகுதியில் புலிக்கொடியேற்ற நிகழ்வு
செஞ்சி மேற்கு ஒன்றியம் சே பேட்டை ஊராட்சியில் வெற்றிகரமாக புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.! நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.!
ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆற்காடு தொகுதிக்குட்பட்ட திமிரி பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது சிறப்பாக முறையில் நடைபெற்றது
திருப்போரூர் தொகுதியில் உழவர்களுக்கு பச்சை துண்டு அணிவித்து மரியாதை
திருப்போரூர் தொகுதி இள்ளலூரில் நமது கட்சி சார்பாக விவசாயிகளை சந்தித்து அவர்கள் உழவு செய்யும் இடத்திற்கு சென்று உழவு செழிக்க வேண்டும் என்று அவர்களை ஊக்கபடுத்த பச்சை துண்டு போர்த்தி நமது கட்சியினரால்...
மேட்டூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் பொங்கல் திருவிழா பொங்கல் வைத்து கதிரவனுக்கு நன்றி சொல்லும் விழா நடைபெற்றது.
இப்படிக்கு
தொகுதி செய்தி தொடர்பாளர்
தினேஷ்
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை திருவிழா
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
செய்யார் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அனக்காவூர் ஒன்றியம் நெடுங்கல் கிளை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 35 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் நிகழ்வை நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் அவர்கள்...
மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
16.01.2023 மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட இராஜாம்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
மண்ணச்சநல்லூர் தொகுதி பொங்கல் மற்றும் தெருமுனைக் கூட்டம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி முன்னெடுக்கும் மாபெரும் பொங்கல் நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் மற்றும் தெருமுனைக் கூட்டம் 18.01.2023 (புதன்கிழமை) அன்று சிறப்பாக நடைபெற்றது.
போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் வடக்கு ஒன்றியம் நாராயணமங்கலம் ஊராட்சியில் தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.
பத்மநாபபுரம் தொகுதி பொங்கல் நிகழ்ச்சி
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 16/01/2023 அன்று திருவட்டார் பேரூராட்சி சாரூர் பகுதியில் பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.