நீரில் எரியும் அடுப்பு: இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர், அன்புத்தம்பி இராமலிங்கம் கார்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
புதுப்பிக்கத்தக்க மாற்று...
எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியுள்ள திருத்தணி-பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனையைச் சீரமைத்து உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டை பேருந்து பணிமனை திறந்து 15 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முழுமையாகச் செயற்பாட்டிற்குக் கொண்டுவராதது வன்மையான கண்டனத்துக்குரியது.
பொதட்டூர்பேட்டை பணிமனைக்கு இதுவரை சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. தரைதளம் அமைக்கப்படவில்லை....
விடுதலைப் போராட்ட வீரர் சிவசிதம்பர ராமசாமி படையாட்சியாரின் 107ஆம் ஆண்டு பிறந்தநாள்!
அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு மேலானது எனும் இலட்சிய உறுதியுடன் நாட்டு விடுதலைக்குப் போராடிய பெருந்தீரர்!
பாட்டாளி மக்களின் வாழ்வு சிறக்க தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தோற்றுவித்த பெருந்தமிழர்!
பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சகப் பொறுப்பேற்று...
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ள திமுக அரசின் பழிவாங்கும்போக்கு...
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்து தண்டிக்க முனையும் திமுக அரசின் பழிவாங்கும்போக்கு அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும். ஆட்சிக்கு வந்த கடந்த நான்கரையாண்டுக்...
திருவேற்காடு வீரராகவபுரத்தில் செயற்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்
ஆவடி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு, வீரராகவபுரத்தில் புதிதாக மருத்துவமனை கட்ட 1.20 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாகச் செயற்பட்டு, அத்திட்டத்தை இடம் மாற்றிப் புளியம்பேடு பகுதியில் மருத்துவமனை கட்டி, மக்களை...
‘இறைத்தூதர்’ நபிகள் நாயகம் பிறந்தநாள் பெருவிழா!
அன்பையும், அறநெறியையும், சமத்துவத்தையும், கொடையையும், மானுடப்பற்றையும் போதித்தருளிய மகத்தான வழிகாட்டி!
நமது போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்திட்ட இத்திருநாளில் என்னுயிர் இசுலாமியச் சொந்தங்களுக்கு எல்லாம்வல்ல ஏகஇறைவனின் நல்லருள் கிடைக்கப் பெற...
உலக இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!
உலகம் முழுவதும் இயன்முறை மருத்துவத் தொண்டாற்றி உடலியக்கத் தடைகள் போக்கும் இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூரும் நாள் இன்று (செப்டம்பர் - 08)!
மருந்துகள் தோற்கும் இடத்தில்
மருத்துவப் பயிற்சிகள் மூலம் உடலின்...
சுங்கக்கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவது மக்களின் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் கொடுஞ்செயல்! – சீமான் கடும் கண்டனம்
தமிழ்நாட்டிலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று (31.08.25) முதல் 45 ரூபாய் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. பெட்ரோல், டீசல் போன்ற வாகன எரிபொருட்களின் விலையை...
அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்க வேண்டும்! –...
கட்டுப்பாடிழந்த அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்காமல் அலைக்கழிக்கும் திமுக அரசின் கொடும்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் தம்பி...
இராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகள்: அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என சீமான்...
இராமநாதபுரத்தின் தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனூர், கே.வேலங்குப்பம், காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் முன்மொழிந்த...