நாம் தமிழர் கட்சி – சிறு குறிப்பு

நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi) 2010 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் தொடங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி ஆகும் (பதிவு எண் 56/48/2013 ). தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நாம் தமிழர் கட்சி செயற்பட்டுவருகிறது.

கதவு எண் 7, மனை எண் 8, மருத்துவமனை சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை, தமிழ்நாடு – 600116 இல் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.

செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்திகள் என்ற பொதுச்சின்னத்தில் முதல்முறையாக தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகள் பெற்றது ( வாக்கு விழுக்காடு 1.10% ). அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் 2.15% வாக்கு விழுக்காடும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ‘கரும்பு விவசாயி’ பொதுச் சின்னத்தில் போட்டியிட்டு 3.89% வாக்கு விழுக்காடும், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 6.72% வாக்கு விழுக்காடும் பெற்று தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி:

ஆண்டு தேர்தல் பெற்ற வாக்குகள் விழுக்காடு %
2016 சட்டமன்றத் தேர்தல் 4,58,104 1.10%
2017 இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல் 3,802 2.15%
2019 22 தொகுதி இடைத்தேர்தல்
தமிழகம் 1,38,419 3.15%
புதுச்சேரி 1,084 4.72%
மொத்த வாக்குகள் 1,39,503
2019 நாடாளுமன்றத் தேர்தல்
தமிழகம் 16,45,185 3.89%
வேலூர் 26,995 2.63%
புதுச்சேரி 22,857 2.89%
மொத்த வாக்குகள் 16,95,037
2021 சட்டமன்றத் தேர்தல்
தமிழகம் 31,08,906 6.72%
புதுச்சேரி 28,189 3.4%
மொத்த வாக்குகள் 31,37,095
2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 10,827 6.35%

Nam Tamilar Katchi was founded in the year 2010 May 18 by Chief Coordinator Senthamilan Seeman. Registered party with Election Commission of India. Currently, the party is operating in Tamil Nadu state and Puducherry Union Territory.

NTK Head Quarters
Ravanan Kudil
Door No. 7/Plot No. 8,
Hospital Road
Chinna Porur
Chennai 600116
Tamil Nadu

Naam Tamilar Katchi officially contested in 2016 assembly elections, for the first time and registered a vote share of 1.1% with 4,58,104 votes.

In RK Nagar By-poll, the party secured 2.15% votes. Striding forward, in 2019 Parliament election, NTK secured a vote share of 3.89% followed by a giant leap to 6.72% in the 2021 TN state assembly elections emerging as the third largest political party in Tamil Nadu state.

  1.  “Naam Tamilar Katchi Candidate List”. Naam Tamilar Katchi2016-06-01
  2. “Naam Tamilar Katchi.pdf” (PDF). Election Commission of India. 2016-06-16 
  3. “List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013” (PDF). India: Election Commission of India. 2013