ஒட்டப்பிடாரம்இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – மூன்றாம் நாள் (06-05-2019 ஒட்டப்பிடாரம்)

31

செய்திக்குறிப்பு: ஒட்டப்பிடாரம்இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – மூன்றாம் நாள் (06-05-2019 ஒட்டப்பிடாரம்) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி”சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நேற்று 04-05-2019 முதல் 17-05-2019 வரைதொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.

இரண்டாம் நாளான நேற்று 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணியளவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மு.அகல்யா அவர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், முல்லைக்காடு , தங்கபாரதி திரையரங்கம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், புதியம் முத்தூர் கடைவீதியில் நடைபெற்றபொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக அயோத்திதாசர் நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

முல்லைக் காடு: https://www.youtube.com/watch?v=dHUDo5_6gqw

புதியம் முத்தூர்: https://www.youtube.com/watch?v=myeXl9RJPaE

மூன்றாம் நாள் 06-05-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மு.அகல்யா அவர்களை ஆதரித்து தூத்துக்குடி, தருவைக்குளம் மாதாக் கோயில் அருகில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கடைவீதியில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம்
விவசாயி”

வலைதளம்: http://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – இரண்டாம் நாள் (05-05-2019 ஒட்டப்பிடாரம்)
அடுத்த செய்திஅறிவிப்பு: சீமான் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – நான்காம் நாள் (07-05-2019 திருப்பரங்குன்றம்)