முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலகச் சரித்திரத்தின் ஒப்பற்ற ஒவ்வொரு சாதனையும், தனி மனிதனின் இடைவிடாத…

0

உலகச் சரித்திரத்தின் ஒப்பற்ற ஒவ்வொரு சாதனையும், தனி மனிதனின் இடைவிடாத உற்சாக உழைப்பின் அடையாளங்கள்; வெற்றிச் சின்னங்கள்!
– எமர்சன்

மிகச் சிறந்த பண்புகளில் முதன்முதலாக உங்களிடம் இருக்க வேண்டியது தூய்மையான இதயம்; இரண்டாவது அடக்கம்!
– ஜோசப் அடிசன்

ஒவ்வொரு வெற்றிக்கும் இன்றியமையாத 3 அம்சங்கள்; ஒன்று மனத்தூய்மை; மற்றொன்று நம்பிக்கை; மூன்றாவது விடாமுயற்சி! – விவேகானந்தர்

முதல் கடமை என்பது, ஒருவன் பிறரைத் திருத்துவதல்ல; தன்னைத்தானே முதலில் திருத்திக்கொள்வதுதான்!
– அறிஞர் பெர்னாட்ஷா

நேற்றைய தவறுகள் நாளையும் தொடராமல் இருக்க, இன்றே திட்டமிட்டுத் திருத்திக்கொள்பவர் யாரோ? அவரே புத்திசாலி; அந்த மனிதர் வெற்றி பெறப்போவதும் உறுதி! – ஃபிரடெரிக்

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக இன்று…
அடுத்த செய்திமனித உரிமைப் போராளி, தோழர் அருந்ததி ராய் மீது  பயங்கரவாத…