முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பரபரப்பு வேறு, சுறுசுறுப்பு வேறு! பரபரப்பு என்பது ஆபத்தின் அன்னை;…

0

பரபரப்பு வேறு, சுறுசுறுப்பு வேறு! பரபரப்பு என்பது ஆபத்தின் அன்னை; சுறுசுறுப்பு என்பது வெற்றியின் செல்லப்பிள்ளை!

தொடர்ந்து தோல்வி வந்தால் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள் அல்ல; தோல்வியைத் தாண்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்!

உங்களுக்குத் தேவையில்லாதவற்றை நிறுத்துங்கள்; உங்களுக்குத் தேவைப்படுவது தானாகவே கிடைக்கும்!

நேரமும், நீரோட்டமும் ஒருபோதும் நிற்காது; அதுபோல உழைப்பும், தன்னம்பிக்கையும் ஒருபோதும் தோற்காது!

இருட்டு எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், அதனால் ஒரு சிறிய விளக்கைக்கூட அணைத்துவிட முடியாது!

வாதாட பலருக்கும் தெரியும்; உண்மை என்னவென்றால் உரையாட ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்!

சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்; அதற்காக உண்மைகளை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்!

பணக்காரர்களிடம் உரையாடினால் பணக்காரனாக மாட்டோம்; ஆனால், அறிஞர்களிடம் உரையாடினால் ஒருவேளை அறிஞன் ஆகலாம்!

முந்தைய செய்திநிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகள்! நாம் தமிழர் கட்சி -…
அடுத்த செய்திஎல்லைக்காத்த மாவீரன்! வனக்காவலன்! நமது ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவைப்…