முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெங்களூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் நிறுவனரும், தமிழ் ஆர்வலருமான…

1

பெங்களூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் நிறுவனரும், தமிழ் ஆர்வலருமான பேராசிரியர் ஐயா சி.இராமமூர்த்தி அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அன்னைத் தமிழ் மொழியை உயிராக நேசித்து அதன் வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிய பெருந்தகை, ஐயா இராமமூர்த்தி அவர்களது இழப்பால் பெருந்துயருற்றுள்ள அன்புத்தங்கை கார்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா சி.இராமமூர்த்தி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழ்த்திரைத்துறையின் மூத்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர்,…
அடுத்த செய்தி“நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு” என போதித்த இயற்கை…