முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

#நூல்_பரிந்துரை 01 நம் தொப்புள்கொடி சொந்தங்களான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து, உலகம்…

0

#நூல்_பரிந்துரை 01

நம் தொப்புள்கொடி சொந்தங்களான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து, உலகம் முழுக்க பரவி வாழ்கின்றபோதிலும், தம் நினைவுகளால் சொந்த மண்ணைப் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருகிறார்கள். போர் மட்டுமல்ல புலம்பெயர்வின் ரணங்களும் ஆற்றமுடியாதது.

அந்தப் பின்னணியில் தாங்கள் எதிர்கொள்ளும் வாழ்வின் நெருக்கடிகளை, கசப்புகளை, அவமானங்களை நேரடியான விவரணைகளோடு ஒரு இலக்கியமாக ஆக்கியுள்ளது எழுத்தாளர் வாசு முருகவேல் அவர்களின் 'மூத்த அகதி' நாவல்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் மனவோட்டங்களையும் நெருக்கடிகளையும் மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ள 'மூத்த அகதி' நாவலைப் பரிந்துரை செய்கிறேன்.

என் உயிர்க்கினிய தம்பி-தங்கைகள் மற்றும் பேரன்பிற்குரிய உறவுகள் அனைவரும் வாங்கிப் படித்து, நம் இனத்தின் வலியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பெருமுயற்சிக்குத் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

#மூத்த_அகதி

முந்தைய செய்திதிருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச்செயலாளர் ஆருயிர் இளவல்…