முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சியைச்…

0

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சியைச் சேர்ந்த அன்புத்தம்பி ச.பாலேந்திரன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி பாலேந்திரன் அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி ச.பாலேந்திரன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇன்று 07.02.2024 சேலம் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்…
அடுத்த செய்திசைதை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சென்னை மாநகரத்…