நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி துணைத்தலைவர் தாரை.பெரியசாமி அவர்களுடைய தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா ராமையா அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஐயா ராமையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ராமையா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



