முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தில் பிறந்தாலும்,…

0

ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தில் பிறந்தாலும், கல்வி ஒன்றே இழந்த உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் மீட்கும் ஒரே வழி என்று உணர்ந்து, அரும்பாடுபட்டு தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதிகளுக்கானத் தேர்வில் வெற்றிபெறச் செய்துள்ள காஞ்சிபுரம் சேக்குபேட்டை தெற்கு வீதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி ஐயா கணேசன் – மேகலா இணையர்க்கும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாளாநல்லூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயா கணேசன்-சந்திரா இணையர்க்கும் எனது உளமார்ந்த பாராட்டையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடிப்படை வசதிகள் கூட சரிவர கிடைக்கப்பெறாமல், கிடைத்த சொற்ப வாய்ப்புகளைப் பயன்படுத்தி சட்டப்படிப்பு முடித்து, விடாமுயற்சியுடன் உழைத்து, அரசுப் போட்டித்தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியுள்ள அன்புத்தம்பி காஞ்சிபுரம் க.பாலாஜி அவர்களுக்கும், அன்புத்தங்கை திருத்துறைப்பூண்டி க.சுதா அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

நீதித்துறையில் தங்கள் பணி சிறக்கவும், சாதனைகள் பல புரிந்து உயர் பதவிகளை அடையவும், சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சமமான நீதியை நிலைநிறுத்தவும் வேண்டுமென பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன்.

முந்தைய செய்திஇந்திய தலைநகர் டில்லியில் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 12…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டப் பொருளாளர் அன்புச்…