முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பக்கிரிசாமி…

0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பக்கிரிசாமி – செல்வமேரி இணையரின் அன்புமகள் காவியா அவர்கள் துருக்கியில் நடைபெறுகின்ற பன்னாட்டுக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியில் விளையாடத் தேர்வாகியுள்ள செய்தியறிந்து மிகுந்த மனமகிழ்ச்சியடைந்தேன்.

சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தபோதும் அன்புமகள் காவ்யாவின் தனித்திறனைக் கண்டறிந்து ஊக்கமளித்த பெற்றோர்க்கும், தீவிர பயிற்சியளித்து இந்திய மகளிர் கால்பந்து அணியில் இடம்பெறும் அளவுக்கு உயர்த்திய பயிற்சியாளர் சகோதரர் மார்க்ஸ் குழுவினருக்கும், துணைநின்ற பள்ளி – கல்லூரி நிர்வாகத்துக்கும் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமகள் காவிய கால்பந்து விளையாட்டில் தமக்குள்ள அசாத்திய திறமையாலும், அயராத முயற்சியாலும் அணியின் வெற்றிக்கு பெரும் பலமாய் துணைநின்று சாதனை படைக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்தி“மாநிலக் கல்லூரி” மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்…
அடுத்த செய்தி“மாநிலக் கல்லூரி” மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கட்டாயப்படுத்துவது மலினமான அரசியல்! – சீமான் கண்டனம