முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) இசைஞானி இளையராஜா அவர்களின்…

0

சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) இசைஞானி இளையராஜா அவர்களின் பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த மனமகிழ்வினை அளிக்கிறது.

துயரில் தவிக்கும் மனிதனை,
உடைந்து நிற்கும் மனதினை,
இசை என்ற இன்ப உலகிற்குள்,
காற்றில் மிதந்தபடி கை பிடித்து அழைத்துச் செல்லும்
‘இசையின் ராஜா எங்கள் ஐயா இளையராஜா’ அவர்களின்
பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும்
இசை நுணுக்கங்களை ஆய்ந்தறிந்து
அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அறிவுக்கருவூலமாக
இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்
இயங்கும் என்பது திண்ணம்.

தமிழரின் இசைப்பெருமையை உலகெங்கும் பறைசாற்றும் புகழ்மிக்க அடையாளமாக ‘இசைஞானி இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ திகழ நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

@ilaiyaraaja

முந்தைய செய்திகாஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த சகோதரர் சௌந்தரராஜன் அவர்களின்…
அடுத்த செய்திபத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை 70 விழுக்காடு வரை உயர்த்தும் முடிவை…