முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அதோடு, இச்சட்டம் ஒரு குற்றம் நடந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்ய, காவல்துறைக்கு…

0

அதோடு, இச்சட்டம் ஒரு குற்றம் நடந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்ய, காவல்துறைக்கு 14 நாட்கள் கூடுதல் கால அவகாசமும் வழங்குவதால், 14 நாட்கள் வரை முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யாமல் இருக்கவும் வழிவகுக்கிறது. இது ஒரு குற்றம் நடந்ததாகப் புகார் வந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு முரணாக இயற்றப்பட்டுள்ளது. மேலும், தலைமைக் காவலர் மட்டத்திலான காவலர் ஒருவரே, பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் எவரையும் கைதுசெய்ய முடியும். "குற்றம்சாட்டப்பட்டவருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, அவருடன் விவாதிப்பது, ஒரு தேநீர் அருந்துவதுகூட குற்றமாகக் காண்பிக்க முடியும் என்பது நாம் சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற ஐயத்தை எழுப்புகிறது. எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே பலரும் இக்கொடுஞ்சட்டப்பிரிவைப் பயன்படுத்திக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படலாம்.

ஆகவே, அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

(2/2)

முந்தைய செய்திஅதோடு, இச்சட்டம் ஒரு குற்றம் நடந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்ய, காவல்துறைக்கு…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – கீழ்பென்னாத்தூர் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…