முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இயற்றமிழ் மூலம் இசைத் தமிழ் தந்த தமிழ்ப் பெருங்கவி! சங்கத்தமிழ்…

0

இயற்றமிழ் மூலம்
இசைத் தமிழ் தந்த
தமிழ்ப் பெருங்கவி!

சங்கத்தமிழ் சாறெடுத்து
தங்கத்திரை தட்டில் வைத்து
கவித்தமிழ் அமுதூட்டிய
ஆண் அன்னை!

செந்தமிழ் சொல்லெடுத்து
தேன்மொழி வார்த்த
தென்மொழிப் பாவலன்!

காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால்,
ஞாலம் உள்ள வரை நிலைக்கும் தன் மொழியால்,
மொழித்துளி செதுக்கி
இறவா இலக்கியம் படைத்து
சிகரங்களைத் தொட்டு
கள்ளிக்காட்டு இதிகாசம் கண்டு
கருவாச்சி காவியம் வடித்து
மூன்றாம் உலகப்போர் தொடுத்து
தண்ணீர் தேசம் நிறைத்து
தமிழாற்றுப்படை கண்ட
எங்கள் கவியாற்றுப்படை.

கவி உலகின் தமிழ் அடையாளம்!

மகாகவிதையாய் வீசி மனங்களை வருடிய வடுகப்பட்டியின் தமிழ்த் தென்றல்!

வையம் உள்ளவரை ஐயா வைரமுத்துவின் வைரத் தமிழ் உலகில் உலவும்!

ஈடு இணையற்ற என் மண்ணின் கவிஞன்!

கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

@Vairamuthu

முந்தைய செய்திபரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டம்: சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 20 உறவுகளையும் உடனடியாகத் விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇயற்றமிழ் மூலம் இசைத் தமிழ் தந்த தமிழ்ப் பெருங்கவி! சங்கத்தமிழ்…