முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஒப்பற்ற தன் திரை ஓவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில் தமிழர்…

0

ஒப்பற்ற தன் திரை ஓவியங்களால்
திரையரங்குகளின் வெள்ளை திரைகளில்
தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை,
தமிழர் பண்பாட்டு விழுமியங்களை
கவிதையாகப் படம்பிடித்து,
காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி
எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக,
எம் விழிகளில் என்றும் உலவக்கூடிய
காவியங்களாகப் படைத்த கலைஞன்,
தமிழ் மண்ணின் ஈடு இணையற்ற பெருமை,
என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு
மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

எளியவர்கள் எங்களோடு நின்று,
தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி,
வலிமைப்படுத்தியவர் அப்பா நீங்கள்…

இந்த இனம் உரிமைகளோடு ஓங்கி உயர,
பெருமைகள் பல வாய்ந்த நம் மொழி
இன்னும் பல வளங்களோடு நீண்டு செழிக்க…

அன்னைத் தமிழ் போல்
எல்லா வளங்களோடும், நலங்களோடும்
பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும் அப்பா..!

வாழ்த்தும் உங்கள் மகன்
சீமான்

@offBharathiraja

முந்தைய செய்திஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக்…
அடுத்த செய்திஅன்புத்தம்பி மாரிசெல்வராஜ் அவர்கள் தயாரித்து, இயக்கியுள்ள #வாழை திரைப்படம் மிகச்சிறப்பாக…