நாம் தமிழர் கட்சி – தஞ்சை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர், மதிப்பிற்குரிய ஐயா வில்சன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும், மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த ஐயா வில்சன் அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா வில்சன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



