முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன விடுதலை எனும் ஈடு இணையற்ற இலட்சியப் பயணத்தில் தன்னையும்,…

0

இன விடுதலை எனும் ஈடு இணையற்ற இலட்சியப் பயணத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு, அதற்காகவே தனது வாழ்வை ஒட்டுமொத்தமாக ஒப்படைத்துக் கொண்ட என் ஆருயிர் இளவல்!

நாம் தமிழர் எனும் பெரும் படையின் தொடக்க காலம் தொட்டு இன்றுவரை எத்தனை எத்தனை நெருக்கடிகள் வந்தபோதும், அத்தனையும் தோற்கடிக்க எம் தோளுக்குத் துணையாக நின்று, தமிழ் நிலத்தில் தமிழ்த்தேசிய அரசு மலர்ந்திட அல்லும் பகலும் அயராது சிந்தித்து, களப்பணியாற்றும் என் படைத்தளபதி!

பேச்சு, எழுத்து, களப்பணி, அறிவாற்றல், ஆளுமைத்திறன் என எல்லா தனித்திறன்களையும் ஒருங்கே திரட்டி, தமிழ்த்தேசிய இனத்தின் இருளகற்ற தன்னை மெழுகுவர்த்தியாய் உருக்கிக்கொண்ட என் உயிருக்கினியவன்!

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்
அன்புத்தம்பி சட்டத்தரணி மணிசெந்தில் அவர்களுக்கு அண்ணனின் அன்புநிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

@manisenthilntk

முந்தைய செய்திஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க, அத்தை மகள் வடிவுடன்…
அடுத்த செய்திதமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர்…