முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட…

0

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி டார்வின் அவர்கள் சவூதி அரேபியா நாட்டில் மீன்பிடித் தொழிலாளராகப் பணியாற்றி வந்த நிலையில் உடல்நலக்குறைவால் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி டார்வின் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தை அளிக்கிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி டார்வின் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஅன்பிற்கினிய உறவுகளுக்கு, தம்பி தங்கைகளுக்கு! வணக்கம். ஆருயிர் இளவல் இரா.சரவணன்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – கிருஷ்ணராயபுரம் தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி…