'தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்!' என முழங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய மெய்யியல் புரட்சியாளர் ஐயா வைகுண்டரின் வழியில் அருந்தொண்டாற்றி வரும் சுவாமிதோப்பு அன்பு வனத்தின் தலைமைப்பதி பெருமதிப்பிற்குரிய ஐயா பால பிரஜாபதி அடிகளாரின் வாழ்விணையர் அம்மா இரமணிபாய் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உற்ற துணையை இழந்துவாடும் ஐயா பாலபிரஜாபதி அடிகளாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் ஐயா வைகுண்டர் அன்பு வனத்தின் அடியார்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா இரமணிபாய் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



